![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmQ0H9i6qrevRbmlp8K2It8gaR4yIMOm-U7ysWQTYSg4l-vucfhf69MC0NCVzsNd4vvs26EmOe8yBwYH_q0zUJHal8VxfPN8Do3ZdVfBFE2DH6-ZgjVXGqBqFEmVnO9yDQ0hW3h2EuchE/s16000/D21DFE2D-E619-45B9-A779-20CCAF97019B.jpeg)
கொரோனா தொற்றுக்கு இலக்கான உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் அமைக்கப்பட்டிருக்கும் சிகிச்சை மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி “டெய்லி மிரர்” பத்திரிகைக்கு தெரிவித்தார்.
"இது எங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல. நாங்கள் இதை எதிர்பார்த்தோம், எல்லா ஏற்பாடுகளும் நடைமுறையில் இருந்தன. மற்றைய நாடுகளும் COVID-19 ஐ எதிர்கொள்கின்றது, அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கொரோனா தொற்றுக்கு இலக்காகாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். இதைப் பற்றி மக்கள் பீதியடையத் தேவையில்லை ”என்று அந்த அதிகாரி டெய்லி மிரரிடம் தெரிவித்தார்.
$ads={2}
மேலும் நேற்று இலங்கையில் இதுவரை 639 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இக்காணவர்களின் எண்ணிக்கை 42,702 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,884 ஆகவும், 34,623 பேர் சிகிச்சை பெற்று வீடும் திரும்பி உள்ளனர்.
$ads={1}