வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையரை மீள அழைப்பதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதுவரை 126 நாடுகளிலிருந்து மொத்தம் 47ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
$ads={2}
மேலும், தென்னிந்தியாவிலுள்ள பதிவு செய்யப்படாத இலங்கை அகதிகள் 20 சதவீதமானோர் இலங்கைக்குத் திரும்ப விரும்புகின்றனர். அதை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.