மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளை தகனம் செய்யுமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
$ads={2}
இந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை அறிக்கை நிபுணர் குழுவொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
வத்தளை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த நிபுணர் குழுவினர் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் நான்கு கைதிகளின் சடலங்களை தகனம் செய்வதற்கு வத்தளை நீதிமன்றம் இந்த உத்தரவினை அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது.