கொரோனா தொற்றினால் உயிரிழந்த 19 பேரின் சடலங்கள் இன்று (08) மாலையாகும் போது, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பல நாட்களாக இந்த சடலங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் சுகாதார தரப்பு, குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை என சுட்டிக்காட்டியது.
$ads={2}
இந்நிலையில், உறவினர்கள் பொறுப்பேற்க மறுக்கும் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் சுகாதார தரப்பினர் இறுதி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.