பண்டாரகம - அடலுகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றாளியை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டது.
பொது சுகாதார அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போதே அவரை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதனையடுத்து அவர் சுகாதார பாதுகாப்புடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.