இலங்கை மற்றும் மலேஷியாவில் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்த ஒருவரை மலேசிய பொலிசார் தமது கட்டிப்பாட்டில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோரை சுட்டுக்கொல்லப் போவதாகவும் அந்த நபர் அச்சுறுத்தினார்.
புக்கிட் அமன் பொலிஸ் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தையும் தாக்குவேன் என்றும் சந்தேக நபர் கூறினார்.
$ads={2}
சந்தேக நபர் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் தகவல்களை அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டதாக புக்கிட் அமன் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்துக் ஹுசிர் முகமது தெரிவித்தார்.
காவல்துறை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் (AKM) 1998 இன் பிரிவு 233 ன் கீழ் இரண்டு விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவர் என தன்னை அடையாளப்படுத்துவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும், பின்னர் இலங்கையில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களிற்கு அனுப்பிய செய்தியில், தான் ஊடகங்களை தொடர்பு கொள்ள முடியாத வகையில் பொலிஸார் தடுத்திருப்பதாகவும், தனது வட்ஸ்அப், கணனி, மின்னஞ்சல் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
$ads={2}
ஊடகங்கள் தன்னை தொடர்பு கொண்டால் பேட்டியளிக்க தயார் என தொலைபேசி இலக்கத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபரை பொலிசார் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.