ஹம்பாந்தோட்டை சூரியவெவ, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற லங்கா ப்றீமியர் லீக் T20 கிரிக்கெட் 6ஆவது போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
இரண்டு அணிகளும் தத்தமது முதலிரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் முதலாவது வெற்றியை குறிவைத்து இன்றைய போட்டியை எதிர்கொண்டன. அதில் கண்டி டஸ்கர்ஸ் வெற்றியீட்டி தனது முதலாவது வெற்றியை சுவைத்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி டஸ்கர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.
ப்றெண்டன் டெய்லர் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் லக்ஷான் சந்தகேன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
$ads={2}
லங்கா ப்றீமியர் லீக்கில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஷஹித் அப்றிடி தலைமையிலான கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
கோல் க்ளடியேட்டர்ஸ் அணியில் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக்க மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களைப் பெற்றார்.