ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை கால்நடையாகச் சென்று தமது அமைதி வழி போராட்டத்தினை இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
$ads={2}
இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்திற்கு முன், பலாத்காரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரிடம் மகஜர் ஒன்று குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு நடைபாதை ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
குறித்த நடைபவனியில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பிரதேச முஸ்லிம்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பேணி கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.