மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி, கைதிகள் உள்ளிட்ட சிறைச்சாலைகள் அதிகாரிகள் மற்றும் வைத்தியர் ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த சம்பவத்தின் போது பல்வேறு வகையான மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு, சிறைச்சாலைக்குள் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டமையினாலே கைதிகளுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இந்த விடயம் குறித்தும் விசேடமாக அறிக்கை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.