இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியது.
இந்நிலையில், கொழும்பு 15 சேர்ந்த 20 நாட்கள் உடைய ஆண் குழந்தை மற்றும் கொழும்பு 10 சேர்ந்த 62 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு இன்றைய தினம் பதிவாகினர்.
இந்நிலையில், இன்றைய தினம் இதுவரையில் புதிதாக 694 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.
316 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
