உயர்நீதிமன்றத்தின் ஆறு புதிய நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள்,
01- திரு. ஏ.எச்.எம் திலீப் நவாஸ்
02- திருமதி குமுதினி விக்ரமசிங்க
03- அந்தோணி லலித் ஷிரான் குணரத்ன
04- திரு. ஜனக் டி சில்வா
05- திரு. ஆரச்சிகே அச்சல உத்தபலவர்ண வெங்கப்புலி
06- திரு மஹிந்த அபேசிங்க சமயவர்தன
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக அர்ஜுன ஒபேசேகர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்
01- திருமதி மேனகா விஜேசுந்தர
02- திரு. டி.என். சமரகோன்
03- திரு. எம். பிரசந்த டி சில்வா
04- திரு. எம்.டி.எம் லபார்
05- திரு. சி. பிரதீப் கீர்த்திசிங்க
06- திரு. சம்பத் பீ. அபயகோன்
07- திரு. எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன
08- திரு. எஸ்.யு.பீ. கரலியத்த
09- திரு. ஆர். குருசிங்க
10- திரு. ஜி.ஏ.டி. கணேபொல
11- திருமதி கே.கே.ஏ.வி. ஸ்வர்ணாதிபதி
12- திரு. மாயாதுன்ன கொரயா
13- திரு. பிரபாகரன் குமாரரத்னம்
14- திரு. டபிள்யூ.என்.என்.பி. இத்தவல
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாகக் கூறினார்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளது. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை எமது அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்ததமை பெருமை அளிக்கிறது என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
"நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது" என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி அவர்கள், 20ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.
நீதியை வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அது ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.
$ads={2}
நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
பிரதம நீதியரசர் ஜயந்த சி. ஜயசூர்ய, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.