மினுவாங்கொடை, கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாகக் காணப்பட்ட கேட்போர்கூடம் உள்ளடங்களாக 12 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா, அண்மையில் வித்தியாலய வளவில் இடம்பெற்றது. அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி அதிபர் எம்.எம்.எம். றிம்ஸான், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ், மினுவாங்கொடை ஜம் இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், மினுவாங்கொடை கல்வி வலய அதிகாரிகள், வித்தியாலய அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் அதிதிகளாகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.
$ads={2}
இந்நிகழ்வில், செல்வன் அம்ஜத் முலம் கிராஅத் ஓதப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
அஷ்ஷெய்கு றிஸ்வான் (ரஹ்மானி) துஆப் பிரார்த்தனை செய்தார்.
இறுதியாக, பிரதி அதிபர் எம்.எம்.எம். றிம்ஸான் நன்றியுரை நிகழ்த்தினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )