மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் ரி. தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமியை கடந்த 28ஆம் திகதி சிறுமியின் பெரியப்பா உறவுமுறையான 78 வயதான முதியவர் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
$ads={2}
சந்தேக நபர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.