கொரேனா தொற்றுக் காரணமாக நிகழும் முஸ்லிகளின் மரணங்கள் தொடர்பில் பாரிய சந்தேகம் உள்ளது. அதனால் இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
$ads={2}
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 22மில்லியன் சனத் தொகையைக் கொண்ட இலங்கையில் சுமார் 10 சத வீதமே முஸ்லிம்கள். ஆனால் கொரோனா தொற்றில் இலங்கையில் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கையில் 10 சத வீதம் கொண்ட முஸ்லிம் சமூகத்திலிருந்து 80 சத வீதமான கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்தை கேட்கின்றோம்.
$ads={1}
அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு கொண்டுபோய் சேர்க்கப்ப்பட்ட பின்னர், அவர்களுக்கு அங்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் இடம்பெறுவதில்லை என அங்கு சென்றுவந்தவர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் கொரேனா தொற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனை மற்றும் பிசிஆர். பரிசோதனை என்பவற்றில் முரண்பாடுகள் உள்ளன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் இருந்துவிட்டு வீடு திரும்பியதுடன் மரணித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
எனவே, இந்த விவகாரங்களின் பின்னணியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதனால் இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வஸீம்