
அத்துடன், இது தெளிவான மனித உரிமை மீறல் என கத்தாரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜவாத் ஷரீப் உடன் தொலைபேசியில் உரையாடிய அவர், ஃபக்ரிசாதே உயிரிழப்பு குறிப்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானுக்கு கிழக்குப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ஃபக்ரிசாதே மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஃபக்ரிசாதே, இறுதியாக ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஈரானிய முயற்சிகளின் சூத்திரதாரி ஃபக்ரிசாதே என மேற்கு நாடுகள் நீண்ட காலமாக சந்தேகிக்கின்றன. ஆனால் ஈரான் அத்தகைய எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை என மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.