கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய கொங்கிறீட்டிலான அடக்கத்தளங்களை அமைத்துத்தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான பைசல் காசிம் இதனை இன்று (30) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து ஆராய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆலோசனையை முஸ்லிம்கள் நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது, விஞ்ஞான காரணங்களுக்காக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மட்டுமே தகனம் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டால், கனமழை பெய்யும்போது வைரஸ் உடலில் இருந்து வெளியேறக்கூடும் என்று குறித்த குழு தெரிவித்துள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யும்போது நீர் மேற்பரப்பில் வராத பகுதிகள் உள்ளன என்று பைசல் காசிம் சுட்டிக்காட்டினார்.
$ads={2}
எனவே தேவைப்பட்டால் தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொங்கிறீட் அடக்கத்தளங்களை நிர்மாணிக்க கூட தாம் தயாராக இருப்பதாக அவர் கூறினார். அத்துடன் கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் அடக்கம் செய்யமுடியும் என்று பைசல் காசிம் தெரிவித்தார்.