கொழும்பு – புறக்கோட்டையின் சில பகுதிகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய தினம் (30) விடுவிக்கப்படவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
$ads={2}
இதன்படி, மெனிங் சந்தை, 04ஆம் குறுக்கு தெரு மற்றும் 05ஆம் குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளையதினம் முதல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.