மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (30) முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்று தம்புள்ள நகரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.