முகக் கவசங்களுக்கு நிர்ணய விலை குறிப்பிடப்பட்ட புதிய வர்த்தமானி நாளை (30) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் வெளியாகின.
இதன்படி, புதிய வர்த்தமானியின் ஊடாக மருத்துவ முகக் கவசமொன்றுக்கு ரூ. 15 ஆகவும், KN95 முகக் கவசம் ரூ. 100 ஆகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி மருந்தகங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் முகக் கவசங்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
$ads={2}
இந்நிலையிலேயே, முகக் கவசங்களுக்கு நிர்ணய விலை குறிப்பிடப்பட்ட புதிய வர்த்தமானி நாளைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.