இலங்கைக்கு வழங்கப்படவிருந்த முதலீட்டுத் திட்டமொன்றினை ஜப்பான் அரசாங்கம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை விநியோகிப்பதற்கும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் நோக்கிலும் குறித்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது.
ஜப்பானின் இலகு ரயில் சேவைத் திட்டத்தை கைவிடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்ததையடுத்தே, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவிருந்த முதலீட்டுத் திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த திட்டத்திற்கான நிதி இடைநிறுத்தப்படுவதானது, நாட்டின் மின்சார விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டில் பாரிய மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
$ads={2}
இதற்கமைய, குறித்த திட்டத்திற்கான நிதியை வேறு ஒரு நாடொன்றின் ஊடாக பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.