மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தொடர்ந்து உயிரிழந்த நிலையில் நான்கு கைதிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக றாகம மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதிகள் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சில கைதிகள் இன்று (29) பிற்பகல் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
இதன் காரணமாகவே அங்கு இவ்வாறு பதற்ற நிலை உருவானதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.