31ஆவது நோயாளி ஆகாதீர்கள்! Don't be like patient 31!

31ஆவது நோயாளி ஆகாதீர்கள்! Don't be like patient 31!

இலங்கையில் 18ஆவது கொரொனா நோயாளி இனம்காணப்பட்ட வேளை சிறு விடயம் ஒன்றை சொல்வதற்கு நினைத்தேன். இக்குறிப்பினை நான் தொடங்குவது "Dont be like patient 31" - "31ஆவது நோயாளியாக ஆகிவிடாதீர்கள்" என்று தொடங்க விரும்புகிறேன்.

இந்த 31ஆவது நோயாளி யார்?

சீனாவுக்குப் பிறகு வைரஸ் முதன்முதலில் வேகமாகப் பரவிய நாடு தென் கொரியா, ஆனால் சில காரணங்களால், அக்காரணம் தான "31ஆவது நோயாளியின்" கதை.

2020 பெப்ரவரி 18 நிலவரப்படி, தென் கொரிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு ஆக இருந்த அதே வேளை மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது, Daegu என்ற நகரைச் சேர்ந்த 61 வயதுடைய ஒரு பெண் 31 ஆவது கொரோனா நொயாளியாக கண்டறியப்பட்டார்.

கதை அங்கேதான் தொடங்குகிறது.  2020 பெப்ரவரி 28ஆம் தேதி ஆகும் போது 31ஆக காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென 1000 நோயாளிகளுக்கு மேல் அதிகரிக்கின்றது. அந்த 31ஆவது நோயாளியின் பின்னனி பரீட்சிக்கும் போது தான் மெய் சிலிர்க்கின்றது.

Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.



பெப்ரவரி 06ஆம் தேதி வாகன விபத்துக்குப் பின்னர் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 07ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து வெளியேறி, செய்யப்பட்டு Shincheonji என்ற தனது விருப்பமான தேவாலயத்திற்குச் சென்றார்.  அவருக்கு காய்சலும் தலை வலியும் வந்துள்ளது. அவர் அதை மிகவும் பாரதூரமாக எடுக்கவில்லை. காய்ச்சல் அதிகரிக்கும் போது வைத்தியர்கள் ஓய்வெடுக்குமாறு  பணித்துள்ளார். அவர் அதை பின்பற்றவில்லை.

பெப்ரவரி 15 அன்று கொரோனா பரிசோதனை செய்யும்படி அவரிடம் கேட்டுக்கொண்டதுடன் அவரால் அப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. நண்பர் ஒருவருடன் ஹோட்டல் ஒன்றில் பகல் போசணம் எடுத்துக்கொண்டு இது ஒரு பொதுவான காய்ச்சல் என்று நினைத்து, காய்ச்சலுடன் தேவாலய ஜெபங்களுக்குச் சென்றார், ஏனென்றால் தேவாலயம் ஒரு தனி மதமாக இருந்தது. சுகவீனம் என்பது தேவ காரியங்கலுக்கு தடை அல்ல என்று தேவாலயத்தின் தலைவர் கூறுகிறார். பெப்ரவரி 15ஆம் திகதி கொரோனா பரிசோதனையை எடுக்க மறுத்த தேவாலயத்தின் கொள்கை செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.

அவள் மிகவும் பக்தியுள்ள பெண். அவள் 16ஆம் திகதியும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அன்று சுமார் 9,000 பேர் அந்த தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தனர். பிரார்த்தனை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. சமய அனுட்டானங்களுக்கு பிறகு இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

17ஆம் திகதி அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 18ஆம் திகதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அசாதாரணமாக அதிகரித்துள்ளது.

தேவாலய பிரார்த்தனைகளில் கலந்து கொண்டவர்களில் சுமார் 1,200 பேர் காய்ச்சல் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினர்.  எதிர்ப்பு காரணமாக தேவாலயம் மூடப்பட்டுள்ளது.  31ஆவது நோயாளி மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கவனக்குறைவு மற்றும் பிடிவாதத்திற்கு இது ஒரு உணர்வுபூர்ணமான உதாரணம். இலங்கை போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற பலர் உள்ளனர்.

உறுதியளிக்கும் காரணம் என்னவென்றால், கண்டக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து இலங்கையில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் தொடர்பு மூலம் பரவும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று வரை குறைவாக உள்ளது.

ஆனால் இத்தாலியில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்படாமல் மறைத்து தவறான தகவல்களைக் கொடுத்த ஒருவர் 31ஆவது நோயாளி போல மாறினால் இலங்கை ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு வராமல் இருக்க பிரார்த்திப்பதுடன் இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன்.


பாடசாலை விடுமுறைகள் முன்னதாக வழங்கப்பட்டன; வழங்கப்பட்ட விடுமுறைகள் குடும்ப சரிதம் பயணங்கள் செல்லவதற்கு அல்ல. ஸ்ரீ பாத யாத்திரையில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நாட்களில் யாத்திரை செல்கின்றனர். இது அதற்கான நேரம் அல்ல. 31ஆவது நோயாளி ஒருவரைப் போல் அவர்களுல் காணப்பட்டால் கொரியாவில் தேவாலயத்தில் எடுக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் கூட எம்மிடமில்லை.  அப்படி நடந்தால், இலங்கை மீண்டும் எழுவதற்கு முடியாமல் செயலற்று போகும்.  

எனவே ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது, 31ஆவது நோயாளியின் கதை யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல; ஆபத்தை காட்டுவதற்காகவே. எனவே அனைவரும் நமது தனிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவோம். இலங்கையை கொரோனாவுக்கு வழங்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியது இலங்கையர்கள்தான்.

மூலம்: முகநூல்

Previous News Next News