இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 06 சடலங்கள் ராகம வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மோதில் படுகாயமடைந்த 37 பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து சிறைச்சாலைக்குள் பாரிய தீ ஏற்பட்ட போதிலும், தீ அணைப்புப் படைகளின் உதவியுடன் நேற்று நள்ளிரவுக்கு மேல் அது அணைக்கப்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.