இதுவரை மேற்கொண்ட 'சிறந்த மதிப்பீடு' ஒன்றின் படி உலக மக்கள் தொகையில் 10 சத விகிதத்தினர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பதாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரகால திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியன் நேற்று (05) கூறினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
குறித்த அந்த மதிப்பீடானது, 760 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருக்கும், இது உலகில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கையை விட 20 மடங்கிற்கும் அதிகமாகும், மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் 34 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவின் சிறப்பு அமர்வில் பேசிய ரியான், புள்ளிவிவரங்கள் நாடுகளுக்கு இடையில் வேறுபடுகின்றன, ஆனால் மொத்த மதிப்பீட்டின் படி “உலகின் பெரும்பான்மையானவர்கள் ஆபத்தில் உள்ளனர்” என்று மேலும் கூறினார், “நாங்கள் இப்போது ஒரு இக்கட்டான காலகட்டத்தினை எதிர்நோக்கிச் செல்கிறோம்.” என்றார்.
$ads={2}