ரிசாத் பதியூதீன் போன்ற எம்பிக்களை இணைத்துக் கொள்ளும் அளவிற்கு முட்டாள்கள் அரசாங்கத்தில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதனால் ரிசாத் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அவர் குறிப்பிட்டார்.
$ads={2}
ரிசாத் பதியூதீன் அரசாங்கத்தில் இணையவந்தால் இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில் நாம் வௌியில் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் வருபவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.