இலங்கையில் கஞ்சா பயிரிடுவதால் 2025 க்குள் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய கஞ்சா செடி பயிர்ச்செய்கை செய்து, அதனை மருத்துவ நுகர்வுக்கு உள்ளநாட்டு பாவனைக்கு பதிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவு அந்நிய செலாவணியினை ஈட்ட முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், எமது நாட்டின் வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என நான் எப்போதும் எண்ணி ஆச்சரியப்படுவது உண்டு. நாங்கள் இதனை செய்தால், 2025 க்குள் எங்கள் கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
குறித்த கஞ்சா வளர்ப்பு செயற்பாட்டினை இராணுவம் மற்றும் எஸ்.டி.எஃப் உதவியுடன் வளர்த்து பாதுகாக்க முடியும், இதனால் ஒரு செடிக் கூட வெளியே செல்லாது. பின்னர் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் மருந்துகளை பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கலாம்.” என அமைச்சர் கூறினார்.