தென்னிலங்கையில் இருந்து வந்து வட மாகாணத்தில் கட்டுமானப் பணிகள், வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களையும் உடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத் தொடர் கண்காணிப்புக்குள் கொண்டுவர வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி வென்னப்புவ பிரதேசத்தில் இருந்து இரு வாரங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிக்கு வந்த ஓர் தொழிலாளி ஆவார்.
இதனால் அப்பகுதியில் இருந்து வட மாகாணத்தின் எப்பகுதியிலேனும் எந்தப் பணிக்காகவேனும் தொழிலாளர்கள் வந்திருப்பின் அவர்கள் அனைவரையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இவ்வாறானவர்களை இனங்காணும் நடவடிக்கை மிக வேகமாக இடம்பெறுகின்றது. PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.