பொரெல்லவில் அமைந்துள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் ஜி. விஜேசூரிய நேற்று (08) உறுதிப்படுத்தினார்.
மினுவாங்கொடையைச் சேர்ந்த இக்குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 07ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தையை தனிமைப்படுத்த மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்னர் நேற்று (08) மாலை PCR பரிசோதனையில் குழந்தைக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், குழந்தையின் தந்தைக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், வாட்டினுல் உள்ள ஏனைய குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இயக்குனர் மேலும் வலியுறுத்தினார்.
பின்னர், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரது தந்தையை IDH மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.