கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டொனாட்ல் ட்ரம்ப் Walter Reed National Military Medical Centreக்கு அழைத்து செல்லப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனாட்ல் ட்ரம்ப் மிகுந்த பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுவதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கான ஹெலிகொப்டர், வெள்ளை மாளிகையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரங்களை துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கு கையளிக்கவில்லை என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அலிஸா பராஹ் தெரிவித்துள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020