மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியரின் வருகையால் கொரோனா தொற்று அந்த பகுதியில் பரவியதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்தியர் ஒருவர் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தமை தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து பார்த்தோம், அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
$ads={2}
இதுவரையில் அவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை 24 மணித்தியாலலும் அரசாங்கம் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நோயை கட்டப்படுத்துவதற்கான சகல சுகாதார நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
இதேவேளை வெளிநாடுகளில் இலங்கை வர எதிர்பார்த்துள்ளோரை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. என்றும் கூறினார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவர் தங்கியிருந்த இடத்திற்கு இந்த பெண் சென்றிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.