மினுவாங்கொடையில் அமையப்பெற்றிருக்கும் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கம்பஹா மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனையின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 40 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 15 கம்பஹா வைத்தியசாலை ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் எவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகினார் என்பதை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருகிறது.
மேலும் தனிமைபடுத்தலுக்காக கொழும்பு IDH வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுகாதார வழிமுறைகளை பேணிக்கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகின்றது