மினுவங்கொடையில் அமைந்துள்ள Brandix ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவிய விதம் பற்றி விசாரணை நடத்தும்படி தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தொழில் ஆணையாளருக்கு உதரவிட்டுள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகிறது. அதேபோல வைரசிற்கான அறிகுறி இருந்தும் தொழிலிலுக்கு திரும்புமாறு சில ஊழியர்களை அந்த நிறுவன முகாமை அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார்.