இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் பேருந்து பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முகக்கவசம் அணியாது பேருந்துகளில் பயணிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ள நிலையில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கூறுகையில்,
இதுவரை இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேருந்தில் பயணிகளை ஏற்றுமாறு தனியார் பேருந்து இயக்குனர்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
எனவே பயணிகள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்களால் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.