கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களை குறிவைத்து சுதேச மருத்துவஅமைச்சகம் சில மருந்துகளை உருவாக்கியுள்ளது என்று சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள்மேம்பாடு மற்றும் சமூக சுகாதார அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் இணைந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குநோயெதிர்ப்பு பானம் மற்றும் ஒரு வகை தூள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
$ads={2}
இந்த மருந்துகள் அக்டோபர் 12 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸிற்கான சிகிச்சையை மேற்கத்திய மருத்துவங்களினால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அது போன்றவளர்ந்த நாடுகள் இன்று கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இந்த சவாலை சமாளிக்கக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் சுதேச மருத்துவ அமைச்சகத்திற்கு உள்ளதுஎன்று அவர் கூறினார்.