பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் அறிக்கை
மினுவாங்கொடையில் பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் நபரொருவருக்கு கொரோனா தொற்று உறிதியாகியுள்ளது.
பிராண்டிக்ஸ் முழுவதும் செயல்படுத்தப்பட்ட கடுமையான நெறிமுறை, மற்றும் பி.எச்.ஐ மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்துபெறப்பட்ட உடனடி பதில் மற்றும் ஆதரவு, நோயாளியை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவியது. மேலும், உடனடி சிகிச்சைக்காகஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சரியான நேரத்தில் இடமாற்றம் செய்ய முடியுமாக இருந்தபடியால், கொரோனா தொற்று மேலும் பரவமால் இருப்பதற்கு இரு வழிவகுத்தது.
நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து உதவுகிறோம், அவர்களின் ஆலோசனையைப் பெறுகிறோம் மற்றும் செயல்முறைமுழுவதும் எங்கள் மிகுந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துகிறோம். வைரஸின் முழுமையான கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்குதேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக செய்தோம். மேலும், பாதிக்கப்பட்ட வேலை தளத்திற்கு கடுமையான கிருமிநாசினி உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நோயாளியுடன் தொடர்பு கொண்ட மற்றைய 40 தொழிலாளர்கள் உடனடியாக அவர்களது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் உறுதிப்படுத்த பி.சி.ஆர்சோதனைக்கு உட்படுத்தப்படவும் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விரைவான பதிலுக்கும் இந்த நேரத்தில் தொடர்ந்து வழங்கப்பட்ட ஆதரவிற்கும் நாங்கள் நன்றி கூறகடமைபட்டுள்ளோம். சுகாதார ஊழியர்களுடன் கலந்தாலோசித்து, எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் சமூகங்களின் பாதுகாப்புமற்றும் நல்வாழ்வை எங்களது மிக உயர்ந்த முன்னுரிமையாக வைத்து தொடர்ந்து எங்கள் கடுமையான நடவடிக்கைகளைகடைப்பிடிப்போம்.