நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்குமாறு புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்து, இஸ்லாம், கிரிஸ்தவ மற்றும் பெளத்த மதஸ்தலங்களில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், மதவழிப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுமாயின் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியியுடன், சுகாதார வழிகாட்டல்களுடன் அவற்றை முன்னெடுக்க வேண்டுமென புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
$ads={2}
எவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களை தமது வீடுகளுக்குள் வழிபாடுகளை முன்னெடுப்பது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.