வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இடம்பெற்று வந்த ஜனாதிபதி உடனான பொதுமக்கள் தினம் நாளை (05) இடம்பெறமாட்டாது என அரச நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள பொதுமக்கள் சந்திப்பு தினம் தொடர்பில் அறிவிக்கப்படும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.