ஹத்ராஸ் கும்பலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்றனர்.
அப்போது அவர்களது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் யமுனா விரைவு நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் அவரது மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் இருவரையும் விடுதலை செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.