கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் வாடகைக்கு அமர்த்திய விமானங்களின் மோசடி அம்பலமான நிலையில் அதனை உடனடியாக நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்..
கடந்த ஜூலை முதல் தனியார் துறைசார் தலையீட்டால் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிதி மோசடிகளின் ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் கோவிட் 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைமையின் கீழ் இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
$ads={2}
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் அரசு அதிகாரிகளும் தூதரக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டினை குறைத்து இது போன்ற மோசடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை ஜனாதிபதிக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட், ஹோட்டல் அறை வழங்கல் மற்றும் விமான கட்டணம் வரை ஒவ்வொரு விமானத்திற்கும் சுமார் ரூ. 36 மில்லியன் லாபம் ஈட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து பயணிகளை அழைத்து வருவதற்காக இலங்கை ஏர்லைன்ஸ் 80,000 அமெரிக்க டாலருக்கு ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது மற்றும் ஒரு பயணிக்கு $ 1,000 வசூலித்துள்ளது.
கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைய பயணிகளுக்கு இடையேயான இடைவெளியைத் தக்கவைக்க விமான டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட அனுமதி பெற்ற நிலையில், ஒரே நேரத்தில் ஒரு விமானத்திற்கு 280 பயணிகள் என விமானங்கள் இயங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. இதில் தனியார் துறை ஒரு விமானத்திற்கு 200,000 டாலர்களுக்கும் அதிகமான லாபம் ஈட்டியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே ரிட்டர்ன் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தியிருந்தாலும் அது செல்லுபடியாகாது எனக்கூறி குறித்த தனியார் நிறுவனத்திடமிருந்து டிக்கெட்டைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
$ads={2}
இலங்கை அரசினால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு பதிவு செய்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்குச் சென்றவுடன் அந்த பட்டியல் சம்பந்தப்பட்ட தனியார் வலையமைப்பைச் சேர்ந்த முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. பட்டியலில் உள்ள பயணிகளை அவர்கள் வாடகைக்கு எடுக்கும் சார்ட்டர்ட் விமானத்தில் செல்ல அனுமதிப்பதாகக் கூறி தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில், விமானங்களில் பயணிப்பவர்களுக்கு ஹோட்டல்களுக்கு ஒரு நாளைக்கு ரூ .12,500 வசூலிக்கப்பட்டதாகவும், ஒரு அறைகளுக்குள் இருவர் என குறைந்த வசதிகளுடன் மற்றும் சாப்பாடு அனுமதிக்கப்பட்டதாகவும் சான்றுகள் வெளிவந்துள்ளன.
மேலும், தனிமைப்படுத்தல் முடிவில் குழுவிற்கு சொகுசு பேருந்துகள் வழங்கப்படும் என வாக்களித்த நிலையில், பொது பஸ் நிலையங்களில் இருந்து சாதாரண பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
$ads={2}