நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படாததால் தேவையற்ற முறையில் உணவுப் பொருட்களை சேகரிக்கவேண்டிய அவசியமில்லை என்று வர்த்தக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் சில பொலிஸ் பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வேறு பகுதிகளில்மக்கள் அதிகமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள்.
இதன் விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாகஅமைச்சர் தெரிவித்தார்.