கொழும்பு மாநகர சபையில் பணிப்புரியும் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்றியுள்ளமை காரணமாக இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பெண் ஊழியரின் தாய் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் தொழில் புரியும் இந்த பெண்ணின் மகளுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.