உயர் கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அவர்களுக்கும் தோட்ட வீட்டுவசதி மற்றும் சமூக உற்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை தெரிவு செய்து அவ்விடத்தினை உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு விரைவில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அமைச்சின் செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.