பசில் ராஜபக்‌ஷவின் செயற்பாட்டால் எதிரணியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசில் ராஜபக்‌ஷவின் செயற்பாட்டால் எதிரணியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்கள்!


20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த 5 பேரின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு இணையவுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் எதிரணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


$ads={2}

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை 145ஆகும்.

டக்ளஸ் தேவானாந்தவின் கட்சி, அத்தாவுல்லா கட்சி, பிள்ளையானின் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தமையினால் 150ஆக ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக்கை 149 ஆக குறைந்துள்ளது.


20ஆம் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு 150 பேரின் ஆதரவு அவசியமாகியுள்ளது. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவரை ஆளும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கை பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பஸில் ராஜபக்ஷ செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.