இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
$ads={2}
மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அர்ப்பணிப்பு மேற்கொண்டமையினால் தன்னை அமைதியாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அந்த பதவியை தான் ஏற்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். எனினும் பதவியின்றி மக்களை காப்பாற்ற தன்னால் முடிந்தவற்றை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.