நாட்டில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து அனைத்து அத்தியவசியமற்ற பயணங்கள் மற்றும் ஒன்று கூடலினை தவிர்த்த்துக்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா (NOCPC) தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திரசில்வா கூறுகையில், நாட்டில் அண்மையில் பரவத் தொடங்கிய கொரோனாவினை கட்டுப்படுத்தும் முகமாக இந்த கோரிக்கையினைவிடுக்கபப்ட்டுள்ளது.
மினுவாங்கொடையொல் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் 150 தொழிலாளர்களில் அறுபத்தொன்பது பேர் கொரோனாதொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகையில், வெளியில் செல்பவர்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அதாவது முகக்கவசங்களை அணிவது மற்றும் கைகளை கழுவுதல்போன்றவற்றினை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.