நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள போதும், முழு நாட்டையும் லொக்டவுன் செய்யவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
லொக்டவுன் என்பது மிகவும் இலகுவான விடயம் என்றாலும் மக்கள் வாழ்வாதார போராட்டத்தை மேற்கொள்ளவதற்கு அது மிகவும் சிக்கலான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று காலை கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
முதலாவது நோயாளியான பெண் அடையாளம் காணப்பட்டவுடன் 3 பிரதேசங்களில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய பெருமளவு ஊழியர்கள் அந்த பகுதியில் இருந்து வருகைத்தருவதே அதற்கு காரணமாகும்.
ஜனாதிபதியுடன் பல விடயங்கள் கலந்துரையாடி நாட்டை முன்னெடுத்து செல்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.