குற்றப்புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் விடுதலையானது சரியானதே எனக்கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னவுக்கு எதிராக சிங்களே தேசிய அமைப்பு இன்று (10) காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
$ads={2}
இதேவேளை, ரியாஜ் பதியுதீனின் விடுதலை குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேரின் கையெழுத்துடனான கடிதம் ஒன்று நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினால் கையளிக்க்பபட்டது.
ரியாஜ் பதியுதீனை விடுவித்தமையானது கடுமையான தவறு என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்திருந்தார்.