கம்பஹா திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானதை அடுத்து, பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறப்பு அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்களை அதிகளவில் காணப்படுகின்றனர்.
அத்துடன் பல சில்லறை வியாபார நிலையங்களில் அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.