அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீள் அறிவிப்பு வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
மேலும், கொழும்பில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் தற்காலிகமாக நாளை முதல் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திவூலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவில் வசிக்கும் அனைத்து துறைமுக அதிகாரசபை ஊழியர்களும் நாளை முதல் மீள் அறிவிப்பு வரும் வரை பணிக்கு சமூகம் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேநேரம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் எவரும் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று PCR பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.