ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மேலாண்மை பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாணந்துறை பகுதியில் வசிக்கும் மாணவர் சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளூர் செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
குறித்த மாணவி பாணந்துறை மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு கண்டறியப்பட்டார்.
$ads={2}
வைத்தியசாலை ஒன்றில் செவிலியராக கடமை புரியும் பெண் ஒருவரின் மகளாக இவர், கடும் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், வைத்தியசாலை செவிலியர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள் என வைத்தியசாலையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்களை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
$ads={2}